கமுதி அருகே அழகு வள்ளியம்மை கோவிலில் திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கூட்டு வழிபாடு நடத்தினர்.;
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகு வள்ளியம்மன் கோவிலில் ஆவணி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின்பு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கூட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று பொங்கல் விழா நடைபெறுகிறது. நாளை புதன்கிழமை காலை பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல், வேல்குத்துதல், பூக்குழி இறங்குதல் மற்றும் உடல் முழுவதும் சேறு பூசி வழிபடுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். பின்னர் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.