சங்கராபுரம் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளும் ஏரியில் கரைக்கப்பட்டன.;

Update:2025-08-31 16:58 IST

சங்கராபுரம் பகுதியில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடைவீதி சக்திவிநாயகர் கோவில், திரவுபதி அம்மன் கோவில், மீனவர் தெரு, வடக்கு தெரு, பங்களா தெரு, ஆற்றுப்பாதைதெரு, முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், பொய்க்குணம் சாலை, பூட்டை சாலை, முருகன் கோவில், ஏரிக்கரை ஆகிய இடங்களில் 4 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான 11 சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சதுர்த்தி விழா முடிந்து 5-வது நாளான இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. 11 விநாயகர் சிலைகளும் வாகனங்கள் மூலம் கடைவீதிக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டன.

இதே போல் பொதுமக்களால் தங்களது வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளும் இந்த ஏரியில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு திருமால் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்