'தக் லைப்' பட சிறப்பு காட்சிக்கு அனுமதி
'தக் லைப்' படம் நாளை வெளியாக உள்ளது.;
சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நாளை வெளியாக உள்ளது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல் பேசியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில், அங்கு 'தக் லைப்' பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாளை ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .