டிரம்ப் அரசின் உத்தரவால் சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்

நிப்டி குறியீடு 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்து உள்ளது, சந்தையின் பலவீன நிலையை எடுத்து காட்டுகிறது.;

Update:2025-08-26 11:35 IST

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 624.03 புள்ளிகள் சரிவடைந்து 81,011.88 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 191.85 புள்ளிகள் குறைந்து 24,775.90 புள்ளிகளாக உள்ளது.

எனினும், இந்துஸ்தான் யூனிலீவர் 0.57 சதவீத லாபத்துடன் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து 0.27 சதவீத லாபத்துடன் இன்போசிஸ், 0.20 சதவீத லாபத்துடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாப வரிசையில் இடம் பிடித்து உள்ளன.

ஆனால், இந்த மூன்று நிறுவன பங்குகள் தவிர்த்து வேறு நிறுவனங்கள் எதுவும் லாப நோக்கில் காணப்படவில்லை. சன் பார்மா, அதானி போர்ட்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை கண்டுள்ளன. பவர் கிரிட் கார்ப்பரேஷன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்களும் சரிவை சந்தித்து உள்ளன.

இந்தியா மீது அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமலாக உள்ள சூழலில், பங்கு சந்தைகளில் முதலீடு செய்வோர் சற்று பதற்றத்துடன் உள்ளனர் என தெரிகிறது. நிப்டி குறியீடு 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்து உள்ளது, சந்தையின் பலவீன நிலையை எடுத்து காட்டுகிறது.

இதுதவிர பண்டிகை விடுமுறையும் வரும் சூழலில், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மும்பை பங்கு சந்தைகளில் இருந்து விலகி இருக்க முயல்கின்றனர். இதனால், ரத்தினங்கள் மற்றும் நகைகள், துணி உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடுமையாக பாதிக்கப்படும் என பங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றின் இயக்குநரான கிரந்தி பதினி கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்