இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட் வழங்கும் படிப்புகள்...! - முழு விவரம்

வனத்துறையின் வளர்ச்சிக்கு இந்த கல்வி நிறுவனம் துணையாக அமைகிறது.;

Update:2025-09-29 08:09 IST

மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகிலுள்ள நேரு நகரில் அமைந்துள்ள கல்வி நிறுவனம் “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட்” (INDIAN INSTITUTE OF FOREST MANAGEMENT). ஆகும்.

1982 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த கல்வி நிறுவனத்தின் நிறுவியது. அன்று முதல் வனத்துறை கல்வி, பயிற்சிகள், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழிகாட்டல் போன்ற பல்வேறு துறைகளில் இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

வனத்துறை சம்பந்தப்பட்ட கல்வியை இளம் மாணவ- மாணவிகளிடம் பயிற்றுவிப்பது இதனுடைய முக்கிய நோக்கம். இருப்பினும், வனக் கல்வியோடு சுற்றுச்சூழல் கல்வி, சமுதாயக் கல்வி மற்றும் மேலாண்மை அறிவியல் கல்வி ஆகியவற்றையும் இந்த கல்வி நிலையம் மாணவர்களுக்கு வழங்குகிறது.

நவீன அறிவியல் மற்றும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகளால் வனத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த கல்வி நிறுவனம் துணையாக அமைகிறது.

பயிற்சிகளாக படிப்புகள்

இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விவரங்கள்;

1 எம்.பி.ஏ (பாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட்) (M.B.A.FORESTRY MANAGEMENT )

2. எம்.பி.ஏ (சஸ்டெய்னபிலிட்டி டெவலப்மெண்ட்) (M.B.A (SUSTAINABILITY MANAGEMENT)

3. எம் பி ஏ (டெவலப்மெண்ட் அண்ட் சஸ்டைனபில் பைனான்ஸ்)

4. எம் பி ஏ (சஸ்டெய்னபிள் டெவலப்மெண்ட்)

5. டாக்டரல் ப்ரோக்ராம் என் மேனேஜ்மென்ட் (டிபிஎம்) DOCTORAL PROGRAMME IN MANAGEMENT (DPM)

-ஆகிய படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.

1 . எம்.பி.ஏ (பாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட்)(M.B.A.FORESTRY MANAGEMENT )

முன்பு "போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட்"(POST GRADUATE DIPLOMA IN FORESTRY MANAGEMENT) (PGDFM) என அழைக்கப்பட்ட இந்த படிப்பு, தற்போது “எம்.பி.ஏ பாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட்” என்னும் பெயரில் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

உலக அளவில் வனத்துறையில் உள்ள அத்தனை தகவல்களையும் திரட்டி, உலக முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு பாடங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. குறிப்பாக –

• APPLICATION OF MANAGEMENT CONCEPTS,

• THEORETICAL FRAME WORKS,

• NATURAL RESOURCES FOR CONSERVATION,

• ECOLOGICAL BALANCE,

• DEVELOPMENT -போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தி பாடங்கள் உருவாக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்பு இரண்டு ஆண்டு படிப்பாகும். இந்த இரண்டு ஆண்டுகளும் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பயிற்சிகள் பெற வேண்டியது அவசியமாகும்.

வேலை வாய்ப்புகள்.

இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் இந்த வேறு விதமான பணிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக,

* PWC,

* KPMG,

* DELOITTE,

* ERNST & YOUNG,

* INTELLECAP,

* WORLD BANK,

* OXFAM GB,

* KANTAR,

* HSBC,

* HP,

* ENKING INTERNATIONAL,

* ARABESQUE,

* ARON GLOBAL,

* WINROCK INTERNATIONAL,

* ABT ASSOCIATES,

* ARVIND LIMITED,

* ITC LTD,

* BILT,

* JK PAPER,

* ADANI,

* ADITYA BIRLA FASHIONS,

* GRASIM INDUSTRY

* HINDALCO,

* INFOSYS,

* HCL TECHNOLOGIES,

* NABARD,

* UTI BANK,

* WHARTON BUSINESS SCHOOL,

* YALE UNIVERSITY,

* DUKE UNIVERSITY,

* COADY INTERNATIONAL INSTITUTE (CANADA),

* CENTRAL EUROPEAN UNIVERSITY

-போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்குகின்றன

2. எம். பி. ஏ (சஸ்டெய்னபிலிட்டி டெவலப்மெண்ட்)

(M.B.A (SUSTAINABILITY MANAGEMENT)

இந்தப் படிப்பு, முன்பு “போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் சஸ்டைனபிலிட்டி மேனேஜ்மென்ட்” என்னும் பெயரில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது எம்.பி.ஏ சஸ்டைனபிலிட்டி மேனேஜ்மென்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு புதிய பாடங்களை உள்ளடக்கி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

சஸ்டெய்னபிலிட்டி டெவலப்மென்ட்(SUSTAINABILITY MANAGEMENT) என்பது ஒரு நிலைத்தன்மை கொண்ட வளர்ச்சியை குறிக்கும். அதாவது, சுற்றுச்சூழல் , பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கு பயன்படும் வகையில் நிலைத்தன்மை கொண்ட வளர்ச்சிக்கு உதவுகிறது.

குறிப்பாக, காலநிலை மாற்றம் மற்றும் பல உயிர்களின் இழப்புகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் நிலைத்தன்மை கொண்ட செயல்பாட்டை உருவாக்கும் வகையில் இந்த படிப்பு அமைகிறது.

உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சி அடைவதற்கு சுற்றுச்சூழல்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் ?அதன் மூலம் எந்தெந்த வழிகளில் உலக மக்களுக்கு நல்வாழ்வையும் வளர்ச்சியையும் வழங்க முடியும்? என்பதை செய்முறை பயிற்சிகளாகவும் கற்றுத் தரப்படுகிறது.

நிலைத்தன்மை வளர்ச்சிக்கு சவால்களாக அமையும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் இந்த படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் இந்த வேறு விதமான பணிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக,

• PWC,

• ERNST & YOUNG,

• KPMG, ARABESQUE,

• VEDANTA RESOURCES LIMITED,

• WIPRO LTD,

• INFOSYS,

• HDFC BANK,

• ADANI TRANSMISSION LIMITED,

• ADANI RENEWABLES,

• HINDALCO,

• TECHNOGREEN ENVIRONMENTAL SERVICES

-போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்குகின்றன

3.எம்.பி.ஏடெவலப்மென்ட் அண்ட் சஸ்டெய்னபிள் பைனான்ஸ்

( M.B.A DEVELOPMENT AND SUSTAINABLE FINANACE).

இந்தப் படிப்பு இரண்டு ஆண்டு படிப்பாகும்.

இந்த படிப்பு 2025 26 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டது. நிதி நிர்வாகத்தில் ஈடுபடும் மேலாளர்கள் அதிகாரிகள் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள படிப்பாக இது அமைகிறது. நிதி நிர்வாகத்தில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

சுற்றுச்சூழல் நிதி, சமூக நிதி மற்றும் கார்ப்பரேட் நிர்வாகம் (CORPORATE GOVERNANCE) போன்றவற்றை கற்றுக் கொள்வதற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

உலக அளவில் உள்ள சுற்றுச்சூழல்களை புரிந்து கொண்டு மிகப் பரிய நிறுவனங்களை நடத்துவது எப்படி? என்கின்ற நிர்வாக பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகிறது

4. எம்.பி.ஏ சஸ்டைனபில் டெவெலப்மென்ட்

( M.B.A SUSTAINABLE DEVELOPMENT)

இந்த படிப்பு 2025 26 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பை பயிலும் மாணவ மாணவிகளின் மேலாண்மை தொழில்நுட்பம் பகுத்தாய்வு மற்றும் சமூக திறன்களை வளர்க்கும் விதத்தில் பல்வேறு பாடங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வரலாறு பண்பாடு அரசியல் அமைப்புகள் மற்றும் பாலின பரிமாணங்கள் (GENDER DIMENSIONS) ஆகியவற்றை இந்த படிப்பில் கற்றுத் தருகிறார்கள்.

பாலின சமத்துவமின்மை பாலின பாகுபாடு பாலின சமத்துவம் மற்றும் பாலின பன்முகத்தன்மை ஆகிய அம்சங்களை இந்த பாலின பரிணாமங்கள் உள்ளடக்கியுள்ளது.

சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படையான பொருளாதாரம் உயிரியல் உளவியல் கலச்ச கலாச்சார வேறுபாடுகள் சூழல்கள் ஆகியவற்றை தெளிவாக இந்த படிப்பை படித்தவர்கள் புரிந்து கொள்ளலாம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக நீதி ஆகியவற்றை நிலைநாட்டவும் பல வழிகளை இந்த படிப்பு கற்றுத் தருகிறது.

மனித குல மேம்பாட்டுக்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதையும், சுற்றுச்சூழல் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும்? என்பதையும் இங்கு கற்றுக் கொள்ளலாம்

5. டாக்டரல் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் (டிபிஎம்) DOCTORAL PROGRAMME IN MANAGEMENT (DPM)

சுற்றுச்சூழல், வனவியல், இயற்கை வளங்கள், மேலாண்மை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு, ஆய்வு மனப்பான்மையோடு டாக்டர் பட்ட ஆய்வை தொடர விரும்புபவர்களுக்கு இந்த படிப்பு மிகவும் பயனுள்ள படிப்பாகும்.

குறிப்பாக ஆய்வு, கற்றல், பயிற்சி, மற்றும் ஆலோசனை ஆகிய பயிற்சிகள் மூலம் இந்த ஆய்வு பட்ட படிப்பு நடத்தப்படுகிறது.

வனத்துறை சம்பந்தப்பட்ட சிறப்பான கல்வி அறிவை பெறுவதற்கும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஆய்வுக்கு தேவையான தெளிவு ,பகுத்தாய்வு செய்யும் திறன், மற்றும் சிறந்த முறையில் தகவல் தொடர்பை வளர்க்கும் விதத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றிற்கு இந்த படிப்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மொத்த இடங்கள்

எம்.பி.ஏ (பாரஸ்ட் மேனேஜ்மென்ட்) என்ற படிப்பிற்கு 150 இடங்களும், எம்.பி.ஏ (சஸ்டைனபிலிட்டி மேனேஜ்மென்ட்) என்ற படிப்பிற்கு 75 இடங்களும், எம்.பி.ஏ (டெவலப்மென்ட் அண்ட் சஸ்டைனபில் பைனான்ஸ்) என்ற படிப்பிற்கு 75 இடங்களும், எம்.பி.ஏ (சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட்) இயங்கும் படிப்பிற்கு 75 இடங்களும் உள்ளன.

நுழைவுத் தேர்வு.

இந்தப் படிப்பில் சேர கண்டிப்பாக நுழைவு தேர்வு எழுத வேண்டும்.

குறிப்பாக -CAT,XAT,MAT,CMAT ஆகிய ஏதேனும் ஒரு நுழைவு தேர்வில் சிறப்பான முறையில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இந்த ஏதேனும் ஒரு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நேர்முகத் தேர்வு.

நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வு அகமதாபாத், பால் டெல்லி, கௌஹாத்தி, சென்னை, பெங்களூர், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறும்..

இட ஒதுக்கீடு

மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறுகிறது.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 18.75 சதவீதமும், பழங்குடி இனத்தவருக்கு 9.375 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதர பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 33.75 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு…

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

INDIAN INSTITUTE OF FOREST MANAGEMENT,

NEHRU NAGAR, BHOPAL. -462 003, INDIA

PHONE: 0755-2768331, 2763925, 2763924, 2766603, 2775703

FAX : 91 – 755-2671929, Email: dpm@iifmbhopal.edu.in

WEB ADDRESS: www.iifm.ac.in/dpm.




 


Tags:    

மேலும் செய்திகள்