இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;
புதுடெல்லி,
மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 976 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு;
காலிபணியிடங்கள்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 527, எலக்ட்ரிக்கல் 208, சிவில் 199, ஐ.டி., 31, ஆர்க்கிடெக் 11 என மொத்தம் 976 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-27 (27.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: 2023, 2024, 2025 கேட் தேர்வு மதிப்பெண்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 27.9.2025
கூடுதல் விவரங்களுக்கு: aai.aero என்ற இணையதளத்தை பார்க்கவும்