தெற்கு ரெயில்வேயில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2025-09-06 22:26 IST

சென்னை,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு

பணி நிறுவனம்: தெற்கு ரெயில்வே

காலி இடங்கள்: 3,518

பதவி: அப்ரண்டீஸ் பயிற்சி பணி

இடம்: கேரேஜ் அண்ட் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் (சென்னை)-1,394 பணியிடம், சென்ட்ரல் ஒர்க் ஷாப் பொன்மலை (திருச்சி)-857 பணியிடம், சிக்னல் அண்ட் டெலிகாம் ஒர்க் ஷாப் யூனிட், போத்தனூர் (கோவை)-1,267 பணியிடம்.

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ.

வயது: 25-8-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 15; அதிகபட்ச வயது 24. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-9-2025

இணையதள முகவரி: https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex

Tags:    

மேலும் செய்திகள்