அரசுப்பள்ளியில் 2 மாணவர்கள் தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை

மரத்தில் 2 மாணவர்களும் துணி காயப்போடும் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.;

Update:2025-10-10 04:01 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வாடா தாலுகா அம்பிஸ்தே பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு பால்கர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின கிராமங்களை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தங்கியிருந்து படித்து வருகின்றனர். நேற்று அதிகாலை நேரத்தில் உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்த மொக்டா தாலுகா பிவல்பாடாவை சோ்ந்த 10-ம் வகுப்பு மாணவன் தேவிதாஸ் நவலே(வயது15), தபாதி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மனோஜ் வாட் (14) மாயமாகி இருந்தனர்.

இதையடுத்து பள்ளி ஊழியர்கள் மாணவர்களை தேடினர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் 2 மாணவர்களும் துணி காயப்போடும் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்