ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் கைது
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சேத்வா செக்டாரில் உள்ள எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்கள் காஞ்சி, அவரது மகன் ஜான்பாலியா என தெரியவந்தது. இவர்கள் பாகிஸ்தானின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ள ஹெமாரி கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும், காஞ்சியின் சகோதரியின் உறவினர் ஒருவர் திருமணமாகி இந்தியாவில் வசிப்பதால் அவர்களை பார்க்க இருவரும் இந்தியாவுக்குள் நுழைய முயன்றதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றன.