சத்தீஷ்கார்: 26 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்
நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 26 மாவோயிஸ்டுகள் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த 8 பெண்கள் உள்பட 26 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ’உங்கள் நல்ல கிராமம்’ என்ற திட்டத்தால் ஈர்க்கப்பட்டு மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். சரணடைந்த மாவோயிஸ்டுகளின் தலைக்கு மொத்தம் 89 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.