காஷ்மீர்: ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 3 வீரர்கள் பலி

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-04 14:23 IST

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு இன்று ராணுவ வாகானம் சென்றுகொண்டிருந்தது. ரம்பன் மாவட்டம் பெட்டரி ஜெஸ்மா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர், உயிரிழந்த வீரர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்