கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வயது குழந்தை பலி
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.;
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டில் இருந்த 3 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. மேலும் அந்த வீட்டில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.