ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை;

Update:2025-04-12 15:01 IST

 

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. பாகிஸ்தானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், கட்டிடங்களும் பாதிக்கப்படவில்லை. கடந்த மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மரில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்