கடந்த ஆண்டில் தொழிலக பாதுகாப்பு படையில் 9 சதவீதம் பேருக்கு பதவி உயர்வு
கடந்த ஆண்டில் தொழிலக பாதுகாப்பு படையில் 9 சதவீதம் பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் 69 விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ நிலையங்கள் மற்றும் முக்கிய அரசு கட்டிடங்களுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு அளித்து வருகிறது. அப்படையில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் கடந்த ஆண்டு சுமார் 9 சதவீதம் பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம் என்றும் அப்படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
அதாவது, அரசிதழ் பதிவு பெற்ற 406 அதிகாரிகளுக்கும், அரசிதழ் பதிவு பெறாத 13 ஆயிரத்து 520 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.