பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு... பெங்களூருவில் விநோதம்

உப்பள்ளியில் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.;

Update:2025-10-03 14:14 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் தனது 2-வது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அந்த குழந்தையின் வயிற்றை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தனர்.

இதுகுறித்து கிம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி ஈஸ்வர் ஹசாபி கூறுகையில், பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரியவந்துள்ளது. முதுகெலும்புடன் கூடிய கரு இருக்கிறது. தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துள்ளோம். அதன் அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இது ஒரு அரிய நிகழ்வு என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்