கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. மாணவர்கள் பலரது நிலைமை கவலைக்கிடம்
விமான விபத்து காரணமாக, விடுதி கட்டிடம் முற்றிலுமாக எரிந்துள்ளது.;

அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக அகமகதாபாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்தது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் உணவு அருந்த விடுதிக்கு வந்ததாக தெரிகிறது. விமான விபத்து காரணமாக, விடுதி கட்டிடம் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. பலர் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.