ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்... துரிதமாக செயல்பட்ட ரெயில்வே ஊழியர்
பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே ஊழியருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓடும் ரெயிலில் இருந்த பெண் ஒருவர் கீழே இறங்க முயற்சித்தார்.
இதில் எதிர்பாராதவிதமாக அவர் நிலைத்தடுமாறி ரெயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே தவறி கீழே விழச்சென்றார். அப்போது அங்கிருந்த ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி என்பவர் துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பெண்ணை காப்பாற்றினார்.
இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே ஊழியருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.