அமர்நாத் யாத்திரைக்கு 7,300 பக்தர்களுடன் 9 -வது குழு பயணம்

பனிலிங்கத்தை இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து உள்ளனர்.;

Update:2025-07-10 21:57 IST

ஜம்மு,

காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரைக்கு ஜம்முவின் பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 534 ஆண்கள், 1,586 பெண்கள், 25 குழந்தைகள், 162 சாதுக்கள் என 7 ஆயிரத்து 307 பக்தர்கள் கொண்ட 9-வது குழு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றது. பால்டால் பாதை வழியாக 137 வாகனங்களில் 3 ஆயிரத்து 81 பக்தர்களும், பஹல்காம் பாதை வழியாக 147 வாகனங்களில் 4 ஆயிரத்து 226 பக்தர்களும் புறப்பட்டனர்.

சுமார் 3 ஆயிரத்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனிலிங்கத்தை இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து உள்ளனர். அமர்நாத் யாத்திரைக்காக இந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு 5 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2-ந் தேதி தொடங்கிய இந்த யாத்திரை அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 38 நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்