ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு - சுப்ரீம் கோர்ட்டில் 10-ந்தேதி விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update:2025-10-08 03:50 IST

புதுடெல்லி,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க முன்வைத்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்