பீகார் சட்டப்பேரவை வரும் 1ம் தேதி கூடுகிறது...!
பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த 20ம் தேதி பதவியேற்றார்.;
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் கைப்பற்றியது. இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த 20ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், பீகார் சட்டப்பேரவை வரும் 1ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சபாநாயகராக ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவருமான நாராயணன் செயல்பட்டு வருகிறார். ஆனால், இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.