ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி

நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆவார்.;

Update:2025-08-17 19:22 IST

புவனேஷ்வர்,

ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் . இவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆவார். இந்நிலையில், 78 வயதான நவீன் பட்நாயக்கிற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நவீன் பட்நாயக் கடந்த மாதம் மும்பையில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின் கடந்த மாதம் 12ம் தேதி ஒடிசா வந்த நவீன் பட்நாயக் டாக்டர்கள் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்