அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்: கோவா முதல்-மந்திரி

பாஜக மூத்த தலைவர்கள் தொடங்கிய பணிகள் இப்போது பலனளிக்கின்றன என்று கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.;

Update:2025-04-08 15:39 IST

கோவா,

அடுத்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். நாடு முழுவதும் பாஜக நிறுவன தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கோவாவின் பனாஜியில் நடைபெற்ற பாஜக கட்சி நிறுவன நாளையொட்டி கட்சி ஏற்பாடு செய்திருந்த அடல் ஸ்ம்ருதி என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரமோத் சாவந்த்,

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வரும் 10 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இரு தென் மாநிலங்களும் 2026-ல் தேர்தலைச் சந்திக்க உள்ளன. வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானியின் காலத்தில் தொடங்கிய பணிகள் இப்போது பலனளிக்கின்றன. இந்தியா ஒரு வல்லரசு என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகிற்கு காட்டினார். பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தினார். சோதனைகளை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது என்பதை உலகிற்கு காட்டினார். நாட்டில் மொபைல் போன் புரட்சியில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார். நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்தக் கருத்தை அவர் கொண்டு சென்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்