மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-24 17:06 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் கொரிஹான் பகுதியில் 22 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இன்று மாலை 3.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் காயமோ, உயிரிழப்போ எதுவும் ஏற்படவில்லை. அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்