புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-31 15:42 IST

புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோப்பநாய் உதவியுடன் மருத்துவமனை முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்குள் டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்