ஐதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்தில் 200 பேர் பயணித்தனர்.;

Update:2025-11-11 02:06 IST


ஐதராபாத்,

இங்கிலாந்து தலைநகர் லண்டலில் இருந்து நேற்று காலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வந்துகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 200 பயணிகள் பயணித்தனர்.

விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஐதராபாத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. உடனடியாக அங்கு தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் பயணிகளை வெளியேற்றி விமானத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்