பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல்: தொடர்ந்து 9-வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

நாடாளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28 -ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.;

Update:2026-01-08 20:35 IST

புதுடெல்லி,

கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. ஆண்டு இந்த பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

இதனால் 2026– 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் அன்றைய தினம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஆலோசனை செய்தது. இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 1-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பரிந்துரை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தொடர்ந்து 9-வது முறையாக ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைக்கிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். ப. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 தடவையும் பட் ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28 -ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் 29-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும். பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

Tags:    

மேலும் செய்திகள்