முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை திட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

கனிமங்களை பிரித்தெடுக்கவும், தயாரிக்கவும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.;

Update:2025-09-04 03:48 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய கனிமங்களின் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும். இத்தகவலை மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களில் இருந்து முக்கியமான கனிமங்களை பிரித்தெடுக்கவும், தயாரிக்கவும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மின்னணு கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், இதர கழிவுகள் ஆகியவற்றில் இருந்து முக்கிய கனிமங்கள் பிரித்தெடுக்கப்படும்.

இந்த திட்டம், தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும். ரூ.34 ஆயிரம் கோடி செலவிலான அத்திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. பசுமை எரிசக்தி பயன்பாட்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதும், தற்சார்பு நிலையை அடைவதும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

தாமிரம், லித்தியம், நிக்கல், கோபால்ட் மற்றும் அரியவகை புவி பொருட்கள் ஆகியவை இதற்கு தேவையான மூலப்பொருட்கள். அகழாய்வை அதிகரித்தல், இறக்குமதியை நம்பி இருப்பதை குறைத்தல், வெளிநாடுகளில் கனிம படுகைகளை வாங்குதல், முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்