பாலத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதிய கார் - பெண் பரிதாப பலி

இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.;

Update:2025-08-04 17:53 IST

பாட்னா,

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள ஜமுவா கரகத் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நேற்று 3 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனிடையே அந்த சாலை ஓரம் பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவர் அந்த கார் மோத வருவதை பார்த்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் அவர் சுதாரித்துக்கொள்வதற்குள் அந்த கார் முதலில் பெண் மீது மோதியது. இதனை தொடர்ந்து அங்கு சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மூன்று பேர் மீதும் மோதி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வடிகாலில் விழுந்தது.

இதனையடுத்து காரின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கோர விபத்தில் பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பவன் (வயது 8) , சலாமுதீன் அன்சாரி (30) , சலீம் அன்சாரி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் அலறினர்.

இதனையடுத்து காயமடைந்த மூன்றுபேரும் பிக்ரம்கஞ்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த பெண் ஜமுவான் கிராமத்தை சேர்ந்த இந்து தேவி (வயது 40) என அடையாளம் கண்டனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்