சிபிஐ இயக்குனருக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி

பிரவீன் சூட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது;

Update:2025-09-06 17:51 IST

ஐதராபாத்,

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குனராக பிரவீன் சூட் செயல்பட்டு வருகிறார். இவர் இன்று தெலுங்கானா மாநிலம் நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் பகுதிக்கு சென்றார். தனிப்பட்ட பயணமாக சென்ற பிரவீன் சூட் ஐதராபாத் சிபிஐ அலுவலக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஸ்ரீசைலத்தில் இருந்து ஐதரபாத் திரும்பியபோது பிரவீன் சூட்டிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரவீன் சூட் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, காலேஸ்வரம் லிப்ட் பாசன திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்