உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் கனமழை, வெள்ளம்; 6 பேர் பலி

மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-08-30 03:10 IST

டெராடூன்,

உத்தரகாண்ட்டில் நேற்று மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. அம்மாநிலத்தின் சமொலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்