கல்லூரி பஸ் கவிழ்ந்து 2 மாணவிகள் பலி ; சுற்றுலா சென்றபோது சோகம்

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவ, மாணவியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.;

Update:2025-04-12 21:58 IST

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குப்வாரா மாவட்டம் ஹாண்ட்வாரா பகுதியில் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர் 27 பேர் கல்லூரி பஸ்சில் இன்று சுற்றுலா சென்றனர்.

உடோபுரா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவ, மாணவியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்றபோது கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்