காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்யும் விவகாரம் இரு மாநிலங்கள் இடையே பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மேகதாது விவகாரம் குறித்து கூட்டத்தில் கர்நாடகா தரப்பு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கான 7.35 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.