காற்று மாசுபாடு: டெல்லி தலைமை செயலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் தீவிரமாக உள்ளது.;

Update:2025-11-26 18:30 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் தீவிரமாக உள்ளது. காற்றின் தரம் மிகவும் மோசமாகியுள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்று காற்றின் தரம் 337 ஆக உள்ளது. இது மிகவும் அபாய அளவாகும்.

இதனிடையே, டெல்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்த ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேவேளை, காற்று மாசை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்த தவறியதாக பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி தலைமை செயலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்