வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்; ரூ. 3 லட்சத்தை இழந்த இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டரின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடுமாறு கேட்டுள்ளது;

Update:2025-08-24 21:30 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் 49 வயதான போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். இவர் தர்டியோ போலீஸ் காலனியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு போக்குவரத்து விதி மீறியதாக ஆர்டிஓ செல்லான் (அபராதம்) தொடர்பான மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் வந்த லிங்கை இன்ஸ்பெக்டர் ஓபன் செய்துள்ளார்.

அப்போது, அதில் இன்ஸ்பெக்டரின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடுமாறு கேட்டுள்ளது. அந்த தகவல்களை அவர் பதிவிட்டுள்ளார். பின்னர், அந்த லிங்க்கை அவர் டெலிட் செய்துள்ளார்.

ஆனால், இன்ஸ்பெக்டர் பதிவிட்ட தகவல்கள் அடிப்படையில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 3 லட்சத்தை சைபர் குற்றவாளிகள் எடுத்துள்ளனர். தகவல்களை பகிர்ந்த 3வது நாளில் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து 3 லட்ச ரூபாய் வித் டிரா செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து இன்ஸ்பெக்டருக்கு மெசேஜ் வந்துள்ளது. அதன்பின்னரே தான் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ. 3 லட்சத்தை இழந்ததை இன்ஸ்பெக்டர் உணர்ந்தார். இதையடுத்து, அவர் தர்டியோ போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்