கர்நாடகத்தில் ‘பைக் டாக்சி’ சேவை மீண்டும் தொடக்கம்
மாநிலம் முழுவதும் மீண்டும் பைக் டாக்சி சேவை தொடங்கியுள்ளது.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் ‘பைக் டாக்சி’ சேவைக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மீண்டும் பைக் டாக்சி சேவை தொடங்கியுள்ளது.