டெல்லி கார் வெடிப்பு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்;
டெல்லி,
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த கார்களும் வெடித்து சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் , 24 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதல்- மந்திரி ரேகா குப்தா தெரிவித்துள்ளார். நிரந்தர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல் - மந்திரி தெரிவித்துள்ளார்.