டெல்லி குண்டுவெடிப்புடன் தொடர்பு எனக்கூறி முதியவர் டிஜிட்டல் கைது: ரூ. 16 லட்சம் மோசடி செய்த கும்பல்

இவர் மும்பை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.;

Update:2026-01-22 00:25 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் கிழக்கு அந்தேரி பகுதியை சேர்ந்தவர் சேகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 75). இவர் மும்பை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இதனிடையே, கடந்த மாதம் 11ம் தேதி சேகர் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் என்.ஐ.ஏ. அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்ட மோசடி கும்பல் சேகரிடம் டெல்லி குண்டுவெடிப்பு கும்பலுடன் உங்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், சேகரிடம் உங்கள் வங்கி கணக்கில் பயங்கரவாத அமைப்பின் வங்கி கணக்கிற்கு ரூ. 7 கோடி பணம் பரிமாறியுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சேகரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக சேகரிடம் அந்த கும்பல் கூறியுள்ளது. மோசடி கும்பலின் மிரட்டலை நம்பிய சேகர் தனது வங்கி கணக்கில் இருந்து அந்த கும்பல் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 16 லட்சம் பணத்தை டெபாசிட் செய்துள்ளார். பணத்தை டெபாசிட் செய்தப்பின் அந்த கும்பல் சேகருடனான தொடர்பை துண்டித்துள்ளது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்த்த சேகர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டிஜிட்டல் கைது மூலம் ரூ. 16 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்