தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு 'ஓ.டி.பி.' பெற இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. கேவியட் மனு
தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.;
புதுடெல்லி,
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கத்தை தி.மு.க. தொடங்கி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் 'ஓ.டி.பி.' பெற தடை விதிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க. சார்பில் ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உறுப்பினர் சேர்க்கைக்காக பொதுமக்களிடம் 'ஓ.டி.பி.' பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ராஜ்குமார் சார்பில் வக்கீல் எம்.பி. பார்த்திபன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும்போது தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.