மும்பையில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

போதைப்பொருட்களை கடத்திய இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-16 19:53 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஜோகேஸ்வரி பேருந்து பணிமனை அருகே சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரை பார்த்தனர்.

அவர்களிடன் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போதைப்பொருட்களை கடத்தி வந்த அப்துல் கரீம் நசீர் ஷேக் (44) மற்றும் யாசின் அலி ஷேக் (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்