பாசம் மட்டும் குழந்தையை வளர்க்கும் உரிமையை வழங்காது - மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பேரன் மீதான பாசம் அவனை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-09-06 02:01 IST

மும்பை,

மும்பையை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது தந்தை வழி பாட்டியின் பராமாிப்பில் வளர்ந்து வந்தான். திடீரென சிறுவனின் பாட்டிக்கும், தந்தைக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. எனவே சிறுவனின் தந்தை, மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டார். ஆனால் அவரது தாயாரோ பேரனை கொடுக்க மறுத்துவிட்டார்.

எனவே தந்தை தனது தாயின் பராமரிப்பில் உள்ள எனது மகனை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது பாட்டியின் தரப்பில் ஆஜரான வக்கீல், “சிறுவன் பிறந்தது முதல் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறான். அவனுக்கு பாட்டியுடன் உணர்வுபூர்மான பாசம் உள்ளது. மேலும் பாட்டியின் மகனுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. அந்த குழந்தைகளை வளர்க்கவே அவர் கஷ்டப்படுகிறார். எனவே சிறுவன் பாட்டியின் பராமரிப்பில் இருக்க வேண்டும்” என வாதாடினார்.

எனினும் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள். பாட்டி- பேரன் இடையே உள்ள பாசம் மட்டும் குழந்தையை வளர்க்கும் உரிமையை அவருக்கு வழங்காது என கூறி சிறுவனை அவனது தந்தையிடம் 2 வாரத்தில் ஒப்படைக்க பாட்டிக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்