கனமழையால் வீடு இடிந்து விபத்து; தந்தை, மகன் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.;

Update:2025-08-09 14:35 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் சந்தவுலி பகுதியில் உள்ள கிராமத்தில் கனமழை காரணமாக நேற்று இரவு வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

களிமண் சுவரால் கட்டப்பட்ட வீடு இடிந்த சம்பவத்தில் இரவு உறங்கிக்கொண்டிருந்த சிவ்முரட் (வயது 65), அவரது ஜெய்ஹிந்த் (வயது 35) உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்