பிரதமர் மோடியுடன் பின்லாந்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை
வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.;
டெல்லி,
பிரதமர் மோடியை இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், குவாண்டம் தொழில்நுட்பம், 6ஜி சேவை, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் போர் குறித்தும், போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தது குறித்தும் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். அதேவேளை, உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிபடுத்தினார்.