சூரத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து... பெரும் சேதம்
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 7 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.;
கோப்புப்படம்
காந்திநகர்,
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பிஸ்கட் மற்றும் வேபர் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் பிரபல தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்நிலையில் போர்சாரா கிராமத்தில் உள்ள இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு தீ ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 7 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே தீயானது கிடுகிடுவென அடுத்தடுத்து பரவத்தொடங்கியது. சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்துவிட்டு எரியும் தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
இதில் தொழிற்சாலையில் பெரும் பகுதி முற்றிலும் தீயில் எரிந்து சாசமாகியுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த டிரம்களில் எரியக்கூடிய திரவம் இருந்தது அதனால் தான் தீயின் தாக்கம் பெரியதாக இருந்தது என கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.