டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானத்தில் கோளாறு
சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார்.;
புதுடெல்லி,
டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் 497 ரக விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு பாட்னாவிற்கு புறப்பட்டது. அப்போது வானில் பறந்த சிறிது தூரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார்.
இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பாட்னா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.