திசைகாட்டும் கருவி சேதம் ஜார்கண்டில் விமான சேவை பாதிப்பு
ஒடிசா மாநிலம் புவனேசுவரம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.;
ராய்ப்பூர்,
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தலைநகர் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் மாலை மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் ராய்ப்பூர் விமான நிலையத்தில் மின்னல் தாக்கி விமான நிலையத்தின் விமானங்களுக்கு திசைகாட்டும் வழிசெலுத்தல் ரேடியோ கருவி சேதம் அடைந்தது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அங்கு இறங்க வேண்டிய 5 விமானங்கள் மராட்டிய மாநிலம் நாக்பூர், ஒடிசா மாநிலம் புவனேசுவரம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இந்த விமான வழிசெலுத்தல் ரேடியோ கருவி விமானங்கள் இலக்கை பொறுத்து அவற்றின் நிலை மற்றும் திசையை தீர்மானிக்க உதவுகிறது. இதனை பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.