ஆக்கிரமிப்பை தடுக்க சென்ற வனத்துறையினரை அடித்து விரட்டிய கிராம மக்கள்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் பன்ஷிகுர்ட் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை பிண்டு ராம் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் 7 பேர் நேற்று பன்ஷிகுர்ட் கிராமத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை தடுக்க சென்றனர். அப்போது, பிண்டு ராமின் ஆதரவாளர்கள் மற்றும் கிராமத்தினர் சேர்ந்து வனத்துறையினரை சரமாரியாக தாக்கி அடித்து விரட்டினர். இதில், வனத்துறையினர் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பிண்டு ராம் மற்றும் கிராமத்தினர் 15 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.