சிறுமிக்கு பாலியல் தொல்லை: கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைதுசெய்தனர்.;

Update:2025-10-13 04:28 IST

பெங்களூரு,

பெங்களூரு அருகே கும்பலகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆர்யன்குமார்(வயது 24). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில், தம்பதி வெளியே சென்றிருந்தபோது, அந்த சிறுமிக்கு ஆர்யன்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமி தனது பெற் றோரிடம் கூறினாள். அதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து கும்பலகோடு போலீஸ் நிலையத்தில் ஆர்யன்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்யன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி விட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்