ரிசர்வ் வங்கி துணை கவர்னராக சந்திர முர்மு நியமனம்
சந்திர முர்மு ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தார்;
டெல்லி,
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா செயல்பட்டு வருகிறார். மேலும், துணை கவர்னர்களாக பூர்ணம் குப்தா, சுவாமிநாதன் ஜானகிராமன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். சந்திர முர்மு ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தார். அவரை ரிசர்வ் வங்கி துணை கவர்னராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.