மராட்டியத்துக்கு பொறுப்பு கவர்னர் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு
குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத், கவர்னராக இருக்கிறார்.;
புதுடெல்லி,
மராட்டிய மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர், தான் வகித்து வந்த மராட்டிய மாநில கவர்னர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, மராட்டிய மாநிலத்துக்கு பொறுப்பு கவர்னராக குஜராத் மாநில கவர்னரை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத், கவர்னராக இருக்கிறார். இவர் மராட்டிய மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.