குஜராத்: கைத்தறி துணியால் ஆன உலகின் மிக பெரிய தேசிய கொடிக்கு மரியாதை
உலகின் மிக பெரிய தேசிய கொடியானது, சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கு முழு அளவிலான மரியாதையும், பெருமையும் செலுத்தப்பட்டது.;
கட்ச்,
குஜராத்தின் பூஜ் மாவட்டத்தின் எல்லையை ஒட்டிய கட்ச் நகரில் ரான் பகுதியில் தோர்தோ என்ற இடத்தில் கைத்தறி துணியால் ஆன உலகின் மிக பெரிய தேசிய கொடியானது, சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கு முழு அளவிலான மரியாதையும், பெருமையும் செலுத்தப்பட்டது.
அப்போது, மக்கள் திரளாக கூடி தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடி காணப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை, மத்திய அரசின் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க மூவர்ண கொடி, தேசத்தின் பெருமை, சுய சார்புக்கான மனவுறுதி மற்றும் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான சிறப்பு வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக உருவாகி உள்ளது.